ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் திருச்சுருபம் கடலிலும் பவனியாக எடுத்துவரப்பட்டது.