மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் தியானம் யூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலயத்தில் நடைபெற்ற தியானத்தில் பிரதான வீதியிலிருந்து ஆலயத்தை நோக்கிய இறைவார்த்தைகளை தாங்கிய பவனி, சிறப்பு திருப்பலிகள், நற்கருணை வழிபாடு, குணமாக்கல் வழிபாடு, பாவசங்கீர்த்தனம், மறையுரைகள் என்பன இடம்பெற்றன.

இத்தியானத்தை இறையிரக்க தியான இல்ல அருட்தந்தையர்கள் சேவியர், சஜீ, அன்ரனி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தியதுடன் இறுதி நாளன்று மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்கள் கலந்து சிறப்பு மறையுரையையும் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin