பதுளை மறைமாவட்டம் பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதயநாதர் சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவி பரிபாலகர் அருட்தந்தை ஜெல்த்சின் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்கள் கலந்து புதிய சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.