திருகோணமலை மறைமாவட்ட குருவும் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன் பேர்னாட் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1972ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன் பேர்னாட் அவர்கள் மட்டக்களப்பு புனித சூசையப்பர் சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் தனது குருத்துவ கல்வியை பெற்றுக்கொண்டதுடன்; உரோமை திருச்சிலுவை பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

1999ஆம் ஆண்டு பேரருட்தந்தை யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் வாழைச்சேனை புனித தெரேசாள் ஆலய உதவிப் பங்குத்தந்தையாகவும், திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயம், மாமாங்கம், கூளாவாடி, பாலையூற்று லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தையாகவும் மறைமாவட்ட குடும்ப அப்போஸ்தலிக்க பணிக்குழுமம், மறைக்கல்வி நடுநிலையம், சமூகத் தொடர்பு நிலையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதுடன் சமூகத் தொடர்பு நிலைய இயக்குனராக பணியாற்றிய காலத்தில் திருகோணமலை மறைமாவட்டத்தின் காலாண்டு சஞ்சிகையாக “அலை ஓசை” சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin