கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாயம் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற சுயதொழில்களை மேற்கொள்வதற்காக ஆனைவிழுந்தான் மற்றும் வன்னேரிக்குளம் கிராமங்களை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா கடனுதவி வழங்கிவைக்கப்பட்டன.

இக்கடன் உதவிக்கான நிதியனுசரணையை ஜேர்மன் நாட்டில் வாழும் திரு. ஜெயரட்ணம் அவர்கள் மூலம் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பக்ஸ் கிறிஸ்ரி அமைப்பு வழங்கியிருந்தது.

By admin