பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகிழ்வூட்டல் நிகழ்வுகள், கருத்துரை, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.
மகிழ்வூட்டல் நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட இளையோர் செயற்குழு உறுப்பினர்கள் முன்னெடுத்ததுடன் மன அழுத்தம் தொடர்பான கருத்துரையை அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெறாட் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்ளும் கலந்துகொண்டார்.