மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் அன்றைய தினம் புனித பேதுருவானவர் திருப்பண்டம் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆசீர்வதித்து எழுந்தேற்றம் செய்யப்பட்டு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா இடம்பெற்றதுடன் திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

By admin