மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஆனைக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

அத்துடன் திருவிழா அன்று மாலை மானிப்பாய் அருணோதய மன்ற வைரவிழா நிகழ்வும் இடம்பெற்றது.

பங்குத்தந்தை அவர்களின் வழநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைரவிழா சிறப்பு மலரான “அருணோதயம்” மலர் வெளியீடும்; பாரி மன்னனின் வாழ்வை சித்தரிக்கும் “கனவு மனை வள்ளல்” கூத்துருவ நாடக ஆற்றுகையும் இடம்பெற்றன.

இந்நாடகத்தை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. இக்னேசியஸ் பிரபா அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிறேசியன் அலெக்ஸ்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்ற அங்கத்தவர்கள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin