கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வுகள் இரு இடங்களில் அண்மையில் நடைபெற்றுள்ளன.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் யூலை மாதம் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியிலும் 07ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், ஆலோசனை மற்றும் மனநல உத்தியோகத்தர் திரு. அருமைத்துரை அவர்கள் வளவாளராக கலந்து குறும்படங்கள், புகைப்பட காட்சிப்படுத்தல், கருத்துரைகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வுகளில் 235ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.