வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்ட இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் முதலாமிடத்தையும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அத்துடன் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான மூன்றாம் இடத்துக்கான போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி உடுப்பிட்டி அமெரிக்க மிஸன் வித்தியாலயத்தை 03:01 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.