ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் தற்கருணைவிழா நிறைவில் திருவிழாவை முன்னிட்டு ஊர்காவற்துறை புனித ஜோசவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா இட்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

By admin