யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப ஆன்மீக வலுவூட்டல் நிகழ்வு யூலை மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது.
உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இளையோர், பெற்றோர்களுக்கான கருத்தமர்வுகள், குழுச்செயற்பாடுகள், இல்ல தரிசிப்புக்கள், அன்பிய வழிபாடுகள், அன்பிய திருப்பலிகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகள் இணைந்து வழிப்படுத்தியிருந்ததுடன் 13ஆம் திகதி இறுதி நாள் மாலை இறைதியான வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது.
இறைதியான வழிபாட்டை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன், பூநகரி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ், இரணைமாதாநகர் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.