யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் யூலை மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமையுடன் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன.

யாழ். நீதிமன்ற நீதிவான் திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கண்காணிப்பில்; துறைசார் நிபுணரும் பேராசிரியருமான திரு. ராஜ் சோமதேவாவின் தலைமையில் நடைபெற்ற இவ்அகழ்வுப் பணிகளில் இதுவரை 65 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

15 நாட்களை கொண்ட இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளையும் உள்ளடக்கி மொத்தமாக 24 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

அகழ்வுப்பணி இரண்டாம் பிரதேசத்தில் பொலித்தீன் பையில் கட்டிவைக்கப்பட்ட எலும்புக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்டு என்புத்தொகுதிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு தடயப்பொருட்களும் நீதிமன்ற கட்டுக்காவலில் சான்றுப்பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் அகழ்வுப்பணிகள் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உத்தேசிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin