கரித்தாஸ் தேசிய மற்றும் சர்வதேச கூட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டுப்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவன கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மேல்தள கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய கரித்தாஸ் செடெக் இயக்குநர் அருட்தந்தை லூக் நெல்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை கரித்தாஸ் நிறுவன புதிய தலைவரான இலங்கை ஆயர் மன்ற தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா அவர்கள் கலந்து கட்ட தொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

அக்கட்டடத்தொகுதியில் நவீன வசதிகளுடனான மாநாட்டு மண்டபம், 12 விருந்தினர் அறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அன்றைய தினம் கரித்தாஸ் செடெக் நிறுவன புதிய தலைவரான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா மற்றும் துணை தலைவரான இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் ஆகியோருக்கான வரவேற்பும் இதுவரை காலமும் தலைவராக கடமையாற்றிய யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் துணை ஆயராக கடமையாற்றிய கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா ஆகியோருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 13 மறைமாவட்ட கரித்தாஸ் நிறுவன இயக்குனர்கள், அருட்தந்தையர்கள், தேசிய நிறுவன பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin