நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளுடன் திரு. அன்று யூலியஸ் அவர்களின் நெறியாள்கையில் ஆலய இளையோரால் “கம்பன் மகன்” தென்மோடி கூத்தும் சிறப்பு நிகழ்வாக மேடையேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆலய இளையோரின் ஆக்கங்களை தாங்கிய “பறழ் பகர்ந்த சரிதம்” நூல் வெளியீடும், கல்வி, விளையாட்டில் சாதனை புரிந்தோர் மற்றும் கலைஞர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைத்ததுடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும், ஆசிரிய ஆலோகசரும் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin