கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி அறத்திநகர் குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீர் மற்றம் திருப்பலியுடன் நிறைவடைந்தது.
நற்கருணை வழிபாட்டை வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் மற்றும் இரணைமாதாநகர் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் ஆகியோர் நெறிப்படுத்தியதுடன் திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இப்பேரணியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.