குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 84 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.