யாழ். மாநகர சபையின் புதிய துணை மேயராக பதவியேற்றுள்ள திரு. இம்மானுவேல் தயாளன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு யூலை மாதம் 02ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் செபமாலைதாசர் கன்னியர் சபை அருட்சகோதரிகளும் ஆயர் அவர்களை அன்றைய தினம் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.