இந்தியாவில் இயங்கும் மாதா தொலைக்காட்சி இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் அன்றைய தினம் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்கள் மன்னார் மடு திருத்தலத்தை தரிசித்ததுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

By admin