பெண்கள் அடக்குமுறை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் வல்லமை மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த விழிப்புணர்வு வீதி நாடகம் யூலை மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை பங்கில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீதி நாடகமும் தொடர்ந்து கருத்துப்பகிர்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பங்கு மக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

யூன் மாதம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ‘கடன் வேண்டாம்’ என்னும் கருப்பொருளில் மேடையேற்றப்பட்ட முதலாவது நாடகத்தை தொடர்ந்து மக்களின் வேண்டுகோளிற்கிணங்க இரண்டாவது ஆற்றுகையாக இந்நாடகம் மேடையேற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin