சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலை நிகழ்வு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், பாடல், நடனம், விவாதம், நாடகம் என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக ஆலய இளையோரின் ஆக்கங்களை தாங்கிய “வழி” சஞ்சகை வெளியீடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் மற்றும் கிராம சேவகர் திரு. றமணா பிரகாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகெண்டனர்.