“தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி” அண்மையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றது.

இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி குழுக்காட்டா பிரிவு போட்டியில் பங்குபற்றிய குழுவில், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன் பெனோ அவர்கள் கலந்துகொண்டதுடன் இவரது குழு மூன்றாம் இடத்தை வென்று குழுவில் பங்குகொண்டவர்கள் தனித்தனியே வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

செல்வன் ஜோண் றஜீவ் பியன் பெனோ அவர்கள் இலங்கை தேசிய கராத்தே அணிக்கு தெரிவான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் முதல் மாணவன் என்பதுடன், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட தைகொண்டோ போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி யூலை மாதம் 03ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் திலீப்குமார் கணேஸ்வரன் 20 வயதிற்குட்பட்ட 50 மீற்றர் Free Style போட்டியில் மாகாண ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 X 4 free Style relay போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin