போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை நிறுவுனர் பியர் பியன்வெனு நோஆய் அவர்களின் திருநாள் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கும்ப கன்னியர் மட யாழ். மாகாண இல்லத்தில் நடைபெற்றது.

மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி பிலிப் அவர்கள் கலந்து திருநாள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் திருக்குடும்ப கன்னியர் சபை மிசனரி பணியில் இணைந்து பணியாற்றியவர்களின் 50 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் முகமாக “Setting off Beyond Dreams” நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இந்நூலினை வெளியிட்டுவைத்தார்.

By admin