மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
யூன் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாசன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
அத்துடன் திருவிழாவை சிறப்பித்து திருவிழா திருப்பலி நிறைவில் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் இரத்ததான முகாமும் முன்னெடுக்கப்பட்டது.
‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் 20 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.