செம்பியன்பற்று தனிப்பனை மடுமாதா யாத்திரை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டு நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அன்றைய திருவிழாவில் தாளையடி பங்கின் தனிப்பனை மடுமாதா ஆலயம் மறைமாவட்ட யாத்திரை தலமாக குருமுதல்வரால் அறிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin