பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

யூன் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin