உருத்திரபுரம் பங்கின் ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய பங்குபணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இப்பங்குப் பணிமனைக்கான அடிக்கல் 2023ஆம் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் பணிக்காலத்தில் நாட்டப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து திறந்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin