கச்சாய் புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற உப நகரபிதா திரு. கிசோர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து புதிய பங்கு பணிமனையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் திரு. மயூரன், அருட்தந்தையர்கள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

By admin