முழங்காவில் ஜெயபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இளவாலை புனித யாகப்பார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை இம்மானுவேல் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
அத்துடன் முழங்காவில் பங்கிற்குட்பட்ட பல்லவராயன்கட்டு 19ஆம் கட்டை அந்தோனியார் ஆலய திருவிழாவும் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இரணைமாதாநகர் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சன்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.