கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தரம் 8,9 பிரிவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி நயோலின் அப்றியானா அவர்கள் மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

இம்மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சில் நடைபெற்றதுடன் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ மதுர செனவிரத்ன அவர்கள் மாணவிக்கான சான்றிதழை வழங்கிவைத்தார்.

By admin