சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய 120ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
09ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 17ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
120ஆவது ஆண்டு சிறப்பித்து திருவிழாவை நிறைவில் புனித இசிதோரின் 07 ஆராதனை பாடல்களை உள்ளடக்கிய “இசையில் இனித்திடும் இசிதோர்” இறுவட்டு வெளியீடு இடம்பெற்றது. இறுவட்டை அருட்தந்தை டேவிட் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.
திருவிழா திருப்பலியில் உள்நாட்டு, வெளிநாட்டு பங்குமக்கள், அயல் ஆலய மக்களென பலரும் பக்தியுடன் கலந்துசெபித்தனர்.
