பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தின் இராசமுருக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை பூங்காவின் நிர்மானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்செபமாலை பூங்கா திறப்புவிழா 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பற்றிமா அன்னை திருவிழா அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய செபமாலை தோட்டத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
நான்கு மறைநிகழ்சிகளையும் சித்தரிக்கும் திருச்சொருபங்களை உள்ளடக்கி அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற இச்செபமாலை பூங்காவிற்கான நிதி அனுசரணையை அருட்தந்தை ஸ்ரனிஸ்ரன் செல்வநாயகம் மற்றும் கனடா நாட்டின் ஹமில்ரன் மறைமாவட்டம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பங்குமக்கள் வழங்கியிருந்தனர்.
இச்செபமாலைப் பூங்கா பிரமாண்டமான முறையில் யாழ் மறைமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது செபமாலை பூங்கா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.