உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07, 08ஆம் திகதிகளில் வழிபாடுகளை தொடர்ந்து சிறப்பு கருத்தமர்வுகளும் அங்கு நடைபெற்றன.

இக்கருத்தமர்வுகளை அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் குடும்ப உறவுநிலை எனும் தலைப்பில் நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து 12ஆம் திகதி நற்கருணை விழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

13ஆம் திகதி திருவிழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை குயின்சன் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin