குடும்ப உறவை மேம்படுத்தும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தால் மறைக்கோட்ட ரீதியாக குடும்பங்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இளவாலை மறைக்கோட்ட குடும்பங்களுக்கான பயிற்சி பட்டறை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையை உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த பெற்றோர், பிள்ளைகளென 50க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin