மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய நாளில் திருப்பலியும் தொடர்ந்து 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிறுவர்கள், இளையோர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.