யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நிறுவுனர் ஆயர் அமரர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுநாள் நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வரும் புனித சவேரியார் இறையியல் நிறுவக இயக்குநருமான அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்க இயேசு சபை அருட்தந்தை ஜெயராஜ் இராசையா அவர்கள் மறையுரையாற்றினார்.

இத்திருப்பலியில் குருமட மாணவர்கள் மற்றம் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

புனித சவேரியார் குருமடம் மறைந்த ஆயர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்களால் 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் ஆயர் அவர்களின் விண்ணகவாழ்வின் நினைவுநாள் கல்லூரியின் நிறுவுனர் தினமாக கொண்டாடப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin