நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 10ஆம் திகதி நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித நீரூற்றை நோக்கிய மெழுகுதிரி பவனியும் மருதமடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை திருவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளன.

திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin