திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் பல்சமய ஒன்றியத்தையும் இணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, திருத்தந்தையின் உருவப்படத்திற்கான அஞ்சலி, அஞ்சலி உரைகள் என்பன இடம்பெற்றன.
அஞ்சலி உரைகளை அருட்தந்தையர்கள் சேவியர் றஜீவா இருதயராஜ், நவரட்ணம், ஜொனத்தன் போல் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்சமய ஒன்றிய அங்கத்தவர்கள், இறைமக்களென பலரும் கலந்து திருத்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி செபித்தனர்.