மட்டக்களப்பு மறைமாவட்ட புனித சூசையப்பர் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை பத்திநாதன் சுகந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்ளென பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பித்து கலைநிகழ்வுகளும் குருக்கள் மற்றும் குருமட மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெற்றன.
