யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக செயலர் திரு. யேசுதாசன் அவர்கள் இணைந்து சுற்றாடல் மேம்பாட்டிற்கான முன் நோக்கிய பயணம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கழக செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இவ்வாண்டுக்கான கழக நிதி சேகரிப்பு கடித உறைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மறைக்கோட்ட கழக உறுப்பினர்கள், மறைமாவட்ட பக்திசபை உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

