யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த 72ஆவது Combined Carol பாடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
வட மாகாணத்தை சேர்ந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் 11 பாடகர் குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
இந்நிகழ்வில் கைதடி Nuffield செவிப்புலன், விழிப்புலன் இழந்தோர் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

