Month: March 2026

உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாட்டில் மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

மகாறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

மன்னார் மறைமாவட்டம் வவுனியா மகாறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஞானராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர்…

சிறுத்தீவு புனித லூர்த்து அன்னை சிற்றாலய திருவிழா

குருநகர் பங்கின் சிறுத்தீவு புனித லூர்த்து அன்னை சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கி…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலய ஆசிரியருமான அருட்தந்தை சதீஸ்குமார் அவர்களின் அன்புத்தாயார் பெனடிக்ற் மேரி யோசேப்பின் அவர்கள் தை மாதம் 23ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை…