மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாலர் வகுப்பு முதல் தரம் மூன்று வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை பாடசாலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆங்கில மொழி மூலம் உயர் கல்வியையோ டிப்ளோமா கற்கைநெறியையோ நிறைவுசெய்தவர்கள் அலுவலகத்தில் தொடர்புகொண்டு ஆசிரிய பணிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 024 222 7751, 076 528 4831, 077 050 1709, 077 065 5587 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.