Month: December 2025

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புத்திக்க ஸ்ரீவர்த்தன அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு மார்கழி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மக்களுக்கு சுண்டுக்குளி பங்கு மக்கள் உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கு மக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர். சுண்டுக்குழி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மார்கழி மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பங்குதந்தை தலைமையிலான குழுவினர்…

கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராக உயர்வு

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் திருமறைக்கலாமன்ற அறக்கொடை நிதிய அங்கத்தவருமான கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகத் உயர்வுபெற்றுள்ளார். முதுநிலை விரிவுரையாளர் நிலையிலிருந்து பேராசிரியர் நிலைக்கு உயர்வுபெற கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் இலங்கையில் கர்நாடக இசைத்துறையின்…

“கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழிற்கான உரையாடல் அரங்கு

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 80 ஆவது இதழ் அமுத மலராக அண்மையில் வெளிவந்த நிலையில் அவ் இதழிற்கான உரையாடல் அரங்கு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில்…

வட மாகாண பண்பாட்டு விழாவும் பாரம்பரிய கண்காட்சியும்

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முன்னெடுத்த பண்பாட்டு விழாவும் பாரம்பரிய கண்காட்சியும் மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர்…