Month: December 2025

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய புனித சிசிலியா திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

மல்வம் திருக்குடும்ப ஆலய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து…

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாடு

போர்டோவின் யாழ் மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

முழங்காவில் புனித மரியன்னை ஆலய மறைக்கல்வி கண்காட்சி

முழங்காவில் புனித மரியன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி கார்த்திகை மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்விப் பொறுப்பாளர் டொன்பொஸ்கோ சபை அருட்சகோதரி மேரி அவர்களின் வழிகாட்டலில்…

இறையியல் கருத்தமர்வு

யாழ்ப்பாணம் புனித டி மசனட் குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தமர்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டி மசனட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபை அருட்சகோதரர்களின் வழிநடாத்துதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட்…