Month: November 2025

திருகோணமலை மறைமாவட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு

திருகோணமலை மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட ஜூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி சிப்பிரியான் வரப்பிரகாசம் அவர்கள் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து விடுதிகள்,…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் அன்புத்தாயார் அவர்கள் கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவின் 50ஆவது ஆண்டு யூபிலியை சிறப்பித்து வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் போல் றிச்சர்ட் காலகர் அவர்கள் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை…

இறந்த விசுவாசிகளுக்கான சிறப்பு திருப்பலி

இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளான கார்த்திகை மாதம் 02ஆம் திகதி, யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் மக்கள் கல்லறைகளை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்புத் திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர். யாழ். புனித கொஞ்சேஞ்சி…