Month: September 2025

புனித அன்னை திரேசா திருவிழா

கோப்பாய் புனித அன்னை திரேசா கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித அன்னை திரேசா திருவிழா புரட்டாதி மாதம் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா

இரணைப்பாலை வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 31ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி சனிக்கிழமை…

இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா

வட்டக்கச்சி பங்கிற்குட்பட்ட இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி சனிக்கிழமை…

“மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு

ஆனையூரான் ஜெராட் அவர்களின் அன்னை மரியாள் கவிதைகள் அடங்கிய “மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் Herz Jesu ஆலயத்தில் நடைபெற்றது. இந்நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பரகாசம்…