Month: September 2025

“யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம்

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மரியன்னை பேராலய பங்குமக்களால் ஆற்றுகை செய்யப்பட்ட “யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும்…

உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வுகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின்…

கிளிநொச்சி பகுதியில் காலநிலை விவசாய பசுமைத் திட்டம் ஆரம்பம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பகுதியில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் காலநிலை விவசாய பசுமைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ் ஆரம்ப…

ஆயர் கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரும் நெடுந்நீவு மண்ணின் மைந்தனுமான பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களின் நினைவாக நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆயர் கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின்…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கரோல் பாடல் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியை நடாத்த இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு குழுவாக விண்ணப்பிக்க முடியுமெனவும் இப்போட்டியில் பங்குபற்றும் ஒரு குழுவில் ஆகக்குறைந்தது…