Month: June 2025

மண்டைதீவு றோ.க வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம் அடங்கலான வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா

மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடம் அடங்கலான வகுப்பறை கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. டென்சில் சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

அருட்தந்தை குணநாயகம் அவர்களின் குருத்துவ 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை குணநாயகம் அவர்களின் குருத்துவ 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து…

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில்…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய தந்தையர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

சாட்டி திருத்தலத்தின் துணை ஆலயமான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தந்தையர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப…

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

சலேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டம், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…