Month: May 2025

மன்னார் மறைமாவட்ட இளையோர் யூபிலி சிறப்பு நிகழ்வு

இளையோர் யூபிலியை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கிறிஸ்ரி நிமலராஜன் அவர்களின் அன்புத்தந்தை திரு. குருசுமுத்து பாக்கியநாதன் அவர்கள் 14ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் பூநகரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. அந்தோனி ஜேம்ஸ் அவர்கள் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.